கண் தான விழிப்புணர்வு பேரணி

மதுரையில் கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-09-10 08:15 GMT
மதுரை கே.கே. நகர் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 40வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் சைலேந்திரா சிங், மற்றும் டாக்டர். அருண்குமார், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் தமிழ்நாடு சாந்தோம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் மாணவ மாணவியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணியானது மாட்டுத்தாவணி போக்குவரத்து சிக்னலில் தொடங்கி கே.கே.நகர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் முடிவடைந்தது இந்நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மண்டல பொது மேலாளர் திருபுஸ்ரீனிவாசன், மற்றும் மதிச்சியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் மாட்டுத்தாவணி போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் மாட்டுத்தாவணி சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News