கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் மீட்பு
கோபால்பட்டி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவர் மீட்பு;
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கன்னியாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் வெள்ளைச்சாமி(85) என்பவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இணைந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளைச்சாமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாணார்பட்டி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளைச்சாமி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.