மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-09-10 10:12 GMT
மதுராந்தகம் ஏரி சீரமைப்ப செய்யப்பட்டு புதிய ஷட்டர்கள் அமைத்து அனைத்து வேலைகளும் முடிந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் பணி நிறைவடைய உள்ளதை திறக்க உள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி இம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரியாகும் இந்த ஏரியில் ஆழப்படுத்தி தூர் வாரப்படவும் கரை மேம்படுத்தி பழைய மதகை அகற்றி புதியதாக 12 மதகுகள் அமைத்து ஷட்டர்கள் பொருத்தி அணை மாதிரியாக புதியதாக கட்டப்பட 2022 -ல் 6 ஆம் மாதம் ரூபாய் 120 கோடியில் மதிப்பிட்டில் கட்ட அரசு ஆணை பிறப்பித்து பணி துவக்கப்பட்டது. பணிக்காலம் 2 ஆண்டுகள் ஆனால் தற்பொழுது கூடுதலாக ஓராண்டுகள் ஆகிவிட்டன இதற்கு பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக வேலை ஓராண்டுக்கு கூடுதலாக கால அவகாசம் தேவை பட்டுள்ளது. தற்பொழுது ஏரி ஆழப்படுத்துதல் கரை பராமரிப்பு மற்றும் அனை மாதிரிய 12 மதகுகள் அமைத்து ஷட்டர்கள் பொறுத்தி ஏரி தற்சமயம் அணை போல் காட்சியளிக்கிறது. இதனுடைய இறுதி கட்டப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ஏரியில் நீர் தேக்கி வைக்க கூடிய நிலையில் தயார் நிலையில் உள்ளதால் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஏரியை ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டு சென்றார்.இனி இந்த ஏரியில் கூடுதல் கொள்ளளவாக 790 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதனால் இந்த ஆண்டுகளுக்கு விவசாயமும் மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரும் வெகுவாக ஏறும் இதனால் குடிநீர் பிரச்சனையும் ஏதும் வராது பல ஆண்டுகால கோரிக்கை தற்போது இந்த அரசு நிறைவேற்றி உள்ளது.

Similar News