சிபிஎம் ஜவகர் படத்திற்கு பிருந்தா காரத் மலர் தூவி மரியாதை!

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் திருவுருவ படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத் மலர் தூவி மரியாதை;

Update: 2025-09-10 12:35 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினரும், அக்கட்சியின் மாநில அலுவலக செயலாளருமான ஜவஹர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் இன்று ஜவகர் இல்லத்திற்கு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் ‌ இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News