பரமத்திவேலூர் பகுதிகளில் காரில் சுற்றிவரும் திருட்டு கும்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தகவல்.

பரமத்திவேலூர் பகுதிகளில் காரில் சுற்றிவரும் திருட்டு கும்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2025-09-10 13:23 GMT
பரமத்திவேலூர், செப்.10: பரமத்திவேலுார் பகுதியில் பைனான்சியர் வீடு உள்ளிட்ட 2 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இது குறித்து தகவல் தெரிவிக்கும்படி வேலூர்  போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தெற்கு நல்லியம்பாளையம், சண்முகா நகரை சேர்ந்தவர் சக்திவேல்(42). பைனான்ஸ் அதிபர். இவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் தங்க நகை, பணம் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். . அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. கார் நம்பரை வைத்து விசாரித்தபோது போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதேபோல் பரமத்தி அரசு மேல்நிலை பள்ளி அருகே குடியிருந்து வருபவர் தமிழரசி (58). இவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து 2 பவுன் நகையை திருடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்துள்ளார். அதில் பரமத்திவேலுார் பகுதியை சேர்ந்த 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் காரில் சுற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. கார் நம்பர் டி.என். 13 எக்ஸ் 2038, மேற்படி மாருதி ஸ்விப்ட் வகை கார், வாகனத்தை கண்டால் பொதுமக்கள் உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தெரிவித்துள்ளார்.

Similar News