சின்னசேலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு, பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்தனர்.