உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாலை 1:00 மணிக்கு, திடீர் வாகன சோதனை ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ், கனரக வாகனங்களை நிறுத்தி அதில் 90 டெசிபலுக்கு மேலாக ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் உள்ள ஏர் ஹரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் டெசிபல் மீட்டர் கருவிகளுடன், டோல்கேட்டை கடந்து செல்லும் ஆம்னி பஸ், லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு வந்த ஆம்னி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்களில் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.