மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு

தேர்வு;

Update: 2025-09-11 02:38 GMT
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளன. இதனையொட்டி மாநில கால்பந்து அணி வீரர்களை தேர்வு செய்வதிற்கான, கடலுார் மண்டல அளவிலான தேர்வு போட்டி நடந்தது.மாணவிகளுக்கான போட்டி சின் னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6ம் தேதி நடந்தது. மாணவர்களுக்கான போட்டி கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் கடலுார் மாண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 100 பேரும், மாணவர்கள் 150 பேரும் பங்கேற்றனர். மண்டல அளவிலான தேர்வு போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். தொடர்ந்து மா வட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உடற்கல்வி இயக்குனர்கள் செந்தமிழ்செல்வன், ராதாகிருஷ்ணன், மணிமேகலை, உடற்கல்வி ஆசிரியர்கள் லோகநதான், தினகரன், தனசெல்வம், பாலமுருகன், சாமிதுரை, ஜான் ஆகியோர் கால்பந்து போட்டிகள் நடத்தி தேர்வு செய்தனர். மொத்தமாக 3 பிரிவுகளின் கீழ் 33 மாணவர்களும், 33 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்கள் மாநில அளவி லான கால்பந்து அணி தேர்வு போட்டியில் பங்கேற்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் தேர்வாகும் மாணவ மாணவிகள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

Similar News