வாணியம்பாடி அருகே தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
வாணியம்பாடி அருகே தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர நீர் பிடிப்பு மற்றும் வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த நீர் வரத்தானது தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய கானாறு மற்றும் மண்ணாறு பகுதியில் அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நாராயணபுரம், திம்மாம்பேட்டை, ஆவாரம்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வழியாக வாணியம்பாடி வரை செல்கிறது இதனால் சுற்றியுள்ள ஏரிகள் கிணறுகள் உள்ளிட்டவை நிரம்பக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்று படுகையில் ஒட்டி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் மேலும் பாலாற்றின் நீர் வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.