ரயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில இளைஞர் பலி

திண்டுக்கல் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில இளைஞர் பலி;

Update: 2025-09-11 04:27 GMT
திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அம்பாத்துரை ரயில் நிலையத்திற்கு இடையே புருலிய - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தும்பாஹெம்பராம் மகன் மோனேஷ்வர் ஹெம்பராம்(41) என்பவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சார்பாக பாஸ்கரன் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான மோனேஷ்வர் ஹெம்பராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News