இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டம்
திண்டுக்கல்லில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டம்;
திண்டுக்கல், மாநகராட்சிக்கு உட்பட்ட 43,44 வார்டு மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 9 வருடம் போராடி தீர்வு இல்லாததால் சவரியார்பாளையம் மதுரை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிழக்கு தாலுகா தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி இடம் அளவீடு செய்து வழங்க உத்திரவாதம் கொடுத்த அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.