திருவேங்கடத்தில் தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு பாஜகவினர் மரியாதை
தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு பாஜகவினர் மரியாதை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கீழத்திருவேங்கடத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரன் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு பாஜக குருவிகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் குட்டி ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் வீரகுமார், தெற்கு ஒன்றிய பொருளாளர் நடராஜன் சக்தி கேந்திரம் பொறுப்பாளர் சின்ன மாடசாமி டாக்டர் சங்கிலி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.