அதானி அறக்கட்டளை சார்பில் நடமாடும் மருத்துவ பிரிவு துவக்கம்
அதானி அறக்கட்டளை சார்பில் நடமாடும் மருத்துவ பிரிவு துவக்கம்;
மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு பணிகளின் சார்பில் நடமாடும் மருத்துவப் பிரிவு துவக்க விழா, மோக்சி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில் நடைபெற்றது. இத்திட்டத்தினை தலைமை வணிக அதிகாரி பரமேஸ்வரன், செயல்பாடு மற்றும் பராமரிப்புத் துறை தலைவர் முல்லா ரவி, மனிதவள துணைத் தலைவர் மனோகர் எத்திராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இத்திட்டமானது 36.5 லட்சம் மதிப்பில் தருவைக்குளம், பட்டினமருதூர், மேல அரசரடி ஆகிய பஞ்சாயத்துகள் உட்பட சுற்றுவட்டார பகுதியாகிய 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த நடமாடும் மருத்துவமனைப் பிரிவில் மக்களுக்கு இலவச சிகிச்சையும், மருந்துகளும் அளிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் மற்றும் அதானி பவுண்டேஷன் இணைந்து ஏற்படுத்திய திட்டமாகும்.