கோவில்பட்டி பேச்சாளருக்கு புதுமைப் பெண் விருது
கோவில்பட்டி பேச்சாளருக்கு புதுமைப் பெண் விருது;
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி கலந்து கொண்டு இல்லறம் இனிக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்ன பாரதிக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ரோட்டரியின் புதுமைப் பெண்விருது வழங்கி பாராட்டி பேசினார். இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், நாராயணசாமி, பாபு, முத்துச்செல்வன், ஆசியா பார்ம்ஸ் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் முத்து முருகன் நன்றி கூறினார்.