தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கலை விழா
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் "மரியின் கலை விழா" செப்.9 முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.;
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் "மரியின் கலை விழா" செப்.9 முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. துவக்க விழாவில் மதுரை மருத்துவ கல்லூரி, மகளிர் மற்றும் மகப்பேறியல் சிறப்பு மருத்துவர் பூங்கோதை அருள் பிரகாசம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவியர் இன்றைய சவால்களை எதிர்கொண்டு மீண்டு எழவேண்டும் என்று சிறப்புரையாற்றினார். தனி நடனம், குழுநடனம், பாடல், பானை ஓவியம், நிலைக்காட்சி, நாடகம், மலர் அலங்காரம், சிகை அலங்காரம், காய்கறி சிற்பம், நெருப்பில்லா சமையல், ரங்கோலி போன்ற கலைத் திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் அனைத்துத் துறை மாணவியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நிறைவு விழாவில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜாய்சிலின் ஷர்மிளா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவியரின் திறன்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். நாற்பதிற்கும் மேற்பட்ட அந்ததந்த துறையில் புலமைபெற்ற நடுவர்கள் மதிப்பீடு செய்த பின் மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த போட்டிகளுக்கான முதல் பரிசுக்கான வெற்றிக் கேடயத்தை ஆங்கிலத் துறை மாணவியரும், இரண்டாம் பரிசுக்கான ஒட்டுமொத்த வெற்றிக் கேடயத்தை வணிகவியல் துறை மாணவியரும் வென்றனர்.