பாப்பநல்லூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.!

பாப்பநல்லூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.!;

Update: 2025-09-11 09:20 GMT
பாப்பநல்லூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாப்பநல்லூர் கிராமத்தை சுற்றி பாப்பநல்லூர், சித்தார்த்தூர்,தீட்டாளம்,பம்பைமேடு, திருவெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெற்பயிர் பயிர் செய்து தற்பொழுது அறுவடை செய்து பாப்பநல்லூர் பகுதியில் உள்ள களத்தில் நெல் பயிர்களை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர்.இந்த நிலையில் திடீரென இயற்கை சீற்றம் காரணமாக இரவு நேரங்களில் பெய்து வரக்கூடிய மழையின் காரணமாக அறுவடை செய்து நெல் கலங்களில் உள்ள நெல்கள் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறைவான ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதியில் நூறு எட்டு இருக்கும் மேலாக நெற்பயிர்களை விவசாயம் செய்யும் பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள் என அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர் . இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் முறையான அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை இதுவரை ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாக திட்டமும் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு பயனும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News