ராமநாதபுரம் இமானுவேல் சேகரன் குருபூஜை விழா நடைபெற்றது
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர்;
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 68 ஆம் நினைவஞ்சலியில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆண்டு தோரும் இவருடைய நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். தற்போது தமிழ்நாடு திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வும்மான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். உடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம்தென்னரசு, மற்றும் திமுக எம். எல். ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் செல்வப் பெருந்தகை தலைமையிலும் தேமுதிக மாவட்ட மாவட்டக் கழகச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை அமுமுக சார்பில் டிடிவி தினகரன் தலைமையிலும் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் தலைமையிலும் என்ன பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்