இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்திய நபர் கைது

இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி வந்த நபர் கைது;

Update: 2025-09-12 01:41 GMT
திருவாருர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த மாங்குடியை சேர்ந்த சுரேஷ் கைது.மேலும் இவர் கடத்தி வந்த 22 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்

Similar News