பாட்டாக்குறிச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்
மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பாட்டாக்குறிச்சியில் உள்ள தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்தை சாா்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. ஆயிரமும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் செய்திருந்தாா்.