திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் பலி
திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்து முதியவர் பலி;
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அருகே அருள்சாமி(65) என்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்சாமியின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.