நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனப்பாக்கம், திருமால்பூர், அகவலம், சயனபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையில் போலீ சார் 2 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேட்டாங்குளம் இருளர் குடியிருப்பு பகுதி அருகே போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகையை சேர்ந்த செல்வம் (வயது 55) என்பதும், கொசஸ்தலை ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.