ரயில் முன்பு பாய்ந்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடியில் மனைவி, குழந்தைகளை பிரிந்த விரக்தியில் மீனவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.;
தூத்துக்குடியில் மனைவி, குழந்தைகளை பிரிந்த விரக்தியில் மீனவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (33) மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சில்வர்புரத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி இருப்பு பாதை ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.