பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்த நடத்துனர் வைரலாகும்வீடியோ
திருச்செந்தூரில் பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்த நடத்துனர் வைரலாகும்வீடியோ;
தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆறுமுகநேரிக்கு அடுத்ததாக காயல்பட்டினம் உள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் காயல்பட்டினம் ஊருக்கு செல்லாமல் அடைக்கலாபுரம் பகுதி சாலை வழியாக திருச்செந்தூர் செல்கிறது இதனால் காயல்பட்டினம் பகுதி பொதுமக்கள் வெகு நேரமாக பேருந்துகளுக்கு காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது மேலும் காயல்பட்டினம் வழியாக செல்லும் பேருந்துகள் இருந்தாலும் அந்த பேருந்துகளில் காயல்பட்டினம் செல்லும் நபர்களை பேருந்து நடத்துனர்கள் முறையாக ஏற்றாமல் பேருந்து கிளம்பும்போது ஏறுங்கள் என கூறி வருகின்றனர் இதனால் ஏராளமான முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் காயல்பட்டினம் பயணத்திற்கு நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து காயல்பட்டினம் வழியாக செல்லக்கூடிய ஒரு தனியார் பேருந்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் பேருந்தில் காயல்பட்டினம் செல்வதற்காக ஏற முயலூம்போது அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் அந்தப் பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் கைய வைத்து மரித்துக்கொண்டு காயல்பட்டினம் பகுதிக்கு இப்போது ஏற முடியாது பேருந்து கிளம்பும் போது தான் ஏற முடியும் இப்போது நேராக தூத்துக்குடி செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த பெண்கள் நாங்கள் பணம் கொடுத்து தானே பயணம் செய்கிறோம் என்று கேட்டதற்கு பணம் கொடுத்தாலும் நீங்கள் முன்கூட்டியே ஏறி இருக்கையில் அமர முடியாது பேருந்து கிளம்பும்போது நின்று கொண்டு தான் வர வேண்டும் எனக் கூறி உள்ளார் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இதற்கு போக்குவரத்து துறை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்