வெள்ளையன் நினைவு தினம் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
வெள்ளையன் முதலாமாண்டு நினைவு தினம் : ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்;
தூத்துக்குடி தாளமுத்து நகர் பிரதான பஜாரில், தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ஆர்.முத்துக்கனி தலைமை வகித்தார். செயலர் எஸ்.கிராஸ், பொருளாளர் எம்.அந்தோணி சௌந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜெ.ஐவஹர் கலந்துகொண்டு, வெள்ளையன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு சங்கத் தலைவர் ஆனந்த் சேகரன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜெபஸ்டியான், வேல்முருகன், செல்வராஜ், ஐசக் மற்றும் தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர்கள் குருசாமி, முத்து, துணைச் செயலர்கள் பஷீர், தங்க மாரியப்பன், சட்ட ஆலோசகர் எஸ்.அய்யாதுரை, ஆலோசகர்கள் பாஸ்கர், அந்தோணி மிக்கேல், மனுவேல் பாண்டியன், கனகராஜ், குணா பாஸ்கர், ஜான்சன், மாடசாமி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.