கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு முறைகேடு: பேராசிரியர்கள் போராட்டம் !

பதவி உயர்வு முறைகேடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்.;

Update: 2025-09-12 09:20 GMT
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்கலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 300-க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பதவி உயர்வுக்கான தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி வழங்காமல், குறைந்த மதிப்பெண் பெற்ற 23 பேருக்கு மட்டும் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். நாங்கள் கேள்வி எழுப்பியபோதும், நிர்வாகம் சரியான விளக்கம் தரவில்லை. எனவே, தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Similar News