கோவை: போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இருவர் - ஒருவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு !
கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் இளைஞர்கள்.;
கோவை வடவள்ளி லாலி ரோட்டில், மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இரண்டு வாலிபர்கள் தாறுமாறாக சென்றபோது, சாலையில் சென்ற கார்கள் மீது மோதிச் சேதம் ஏற்படுத்தினர். உடனே பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் ஒருவர் தப்பி உடைய நிலையில் மற்றொருவரை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இவ்வகை போதை வாகன ஓட்டிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.