மின்சார வயர் துண்டித்து விழுந்ததில் மூன்று ஆடுகள் பலி
நிலக்கோட்டை அருகே திடீரென சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் போடி கவுண்டன்பட்டி பகுதியில் மின்சார வயர் துண்டித்து விழுந்ததில் மூன்று ஆடுகள் பலி பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதியில் பகல் வேளையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை கொட்டியது இதன் தொடர்ச்சியாக நிலக்கோட்டை அருகே போடி கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த போது சுழன்று அடித்த சூறாவளி காற்றில் மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்தது அதே நேரத்தில் மேச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தனராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடுகள் மீது அந்த மின்சார கம்பி விழுந்ததில் மூன்று ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானது இதனை அடுத்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.