திண்டுக்கல் "பசுமை"யை வலியுறுத்தி மழலைகள் பேரணி
திண்டுக்கல் RM காலனியில் "பசுமை"யை வலியுறுத்தி மழலைகள் பேரணி;
திண்டுக்கல் தனியார் பள்ளி சார்பில் கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு மழலைகள் பசுமையை வலியுறுத்தி பேரணி சென்றனர். ஆர்.எம் காலனி பகுதியில் உள்ள திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் வினோதா மழலைகளுக்கான பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி மேற்கு காவல் நிலையத்தில் தொடங்கி 100 மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இதில் 224 மழலைகள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் தங்களது கைகளில் மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர்.