மாங்கரை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்
மாங்கரை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்;
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மலரவன், பொதுவிநியோகத்திட்டம் சார்பதிவாளர் அன்பரசு, களஅலுவலர் மணிகண்டன், செயலாளர் கலையரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.