எதிர்க்கட்சிகள் காணாமல் போய் உள்ளன. அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சாதனை திட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவு திமுகவிற்கு தான் உள்ளது இதன் காரணமாக தற்போது எதிர்க்கட்சிகள் காணாமல் போய் உள்ளன என தூத்துக்குடி மாநகர திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் இதனை தெரிவித்தார்.‌;

Update: 2025-09-13 04:46 GMT
தூத்துக்குடி மாநகர திமுக அவசர செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு மாநகர திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை துவங்கி வைத்ததின் மூலம் நாம் அனைவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டது இதன் காரணமாக மக்களின் மனநிலை தெரிந்து கொள்ளவும் ஏற்பட்டது மட்டுமின்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் சாதனை திட்டங்களை தெரிவிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது அனைத்து மக்களின் ஆதரவு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தான் இருந்து வருகிறது இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் காணாமல் போய் உள்ளன என தெரிவித்தவர். மேலும் மக்களின் திட்டமாக மகளிர் உரிமைத்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன தற்போது துவங்கியுள்ள உங்களுடன் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்துறைக்காக மனு அளித்த மகளிர்க்கு தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதுபோல் வழங்கப்படும் என தெரிவித்தார் மேலும் வருகின்ற 15ஆம் தேதி அன்பு கரங்கள் என்று திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் இந்த திட்ட மூலம் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் கல்வி செலவுக்கு வழங்கும் திட்டமாகும் இந்த திட்டம் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு நான் முதல்வன் திறன் மேம்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகளும் பள்ளி படிப்பை முடித்தவுடன் வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டத்தை அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.‌ இந்த கூட்டத்தில் அண்மையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தமிழகத்தில் தொழில் வளம் பெருக வேண்டும் என்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளது நன்றி தெரிவித்தும் திமுக முப்பெரும் விழாவில் மாநகரத்தில் பெருமளவில் கலந்து கொள்வது எனவும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகரம் முழுவதும் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்வது எனவும் முப்பெரும் விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பெரியார் விருது வழங்குவதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி துணை மேயர் ஜெனிட்டா பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண், வட்ட செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, வைதேகி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News