கோடங்கிபட்டி - முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் முத்துசாமி.
கோடங்கிபட்டி - முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் முத்துசாமி.;
கோடங்கிபட்டி - முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் முத்துசாமி. செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் திமுக சார்பில் மாபெரும் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக கட்சிக்காக சிறப்பாக பணியாற்றிய கட்சியினருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் பணிகளை இன்று ஈரோட்டில் இருந்து வருகை தந்த வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி உடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் விழாவுக்காக அமைக்கப்படும் அமைப்புகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் விளக்கம் கேட்டு பெற்றார் அமைச்சர் முத்துசாமி. மேலும் இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஈரோட்டில் இருந்து கட்சியினரை அழைத்து வந்து உள்ளதாக தெரிவித்தார்.