கோவில் கட்டளை சொத்தை பத்திரப்பதிவு செய்த நபர் மீது வழக்கு
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் கட்டளை சொத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு;
திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் கட்டளை சொத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக BMS.முருகேசன் மகள் மனிஷா மீது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக செய்த பத்திரப்பதிவு ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவிக்கையில் கோவில் சொத்து கோவிலுக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது என்று அவர் தெரிவித்தார் இந்நிகழ்வு பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.