பிரதமர் மோடி பிறந்தநாள்- கரூரில் பிஜேபினர் அன்னதானம் செய்தனர்.

பிரதமர் மோடி பிறந்தநாள்- கரூரில் பிஜேபினர் அன்னதானம் செய்தனர்.;

Update: 2025-09-13 13:19 GMT
பிரதமர் மோடி பிறந்தநாள்- கரூரில் பிஜேபினர் அன்னதானம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர், வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பிஜேபி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News