அரசியல் யாத்திர வா...... இல்ல உங்க வார விடுமுறை ஆ.
விஜய் நிகழ்ச்சி ரத்து செய்த நிலையில் நள்ளிரவுவெகு நேரம் காத்திருந்து விரக்தியில் மன வேதனையில் சென்ற , கட்சித் தொண்டர்களா, ரசிகர்களா, இல்லை வேறு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்பார்களா யார்?;
த வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சி ரத்து , நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பெண்கள் சிறுவர்கள் விரக்தியில்மனவேதனையில் சென்ற நிலையில், இன்று அதிகாலையில் பெரம்பலூர் நகர் பகுதியில் முழுவதும் சகோ.. இது அரசியல் யாத்திர வா...... இல்ல உங்க வார விடுமுறை ஆ...... என்று ஆங்கிலத்தில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ...... தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் நேற்று பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதாக இருந்த நிலையில், பல்வேறு இடங்களுக்குச் சென்று தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு வேல் பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை பகுதிக்கு வந்தவர், வழியில் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்தவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வராமல் பாலக்கரை பகுதியில் இருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றார், இதனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடல் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள்,பெண்கள், கட்சித் தொண்டர்கள் சிறுவர்கள் குழந்தைகள் என சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்து, மனவிரத்தில் வேதனையடைந்து சென்றனர் நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்த சென்ற நிலையில் இன்று அதிகாலை நகரின் பல்வேறு பகுதிகளில் (Bro.. Idhu Political Yatra va.. ila unga weekend getaway ah..) சகோ.. இது அரசியல் யாத்ரா வா.. இல்ல உங்க வார விடுமுறை ஆ.. என்றும். (Bro.. Arasiyal weekend trip illai.. Full time job Bro!) சகோ.. அரசியல் வார இறுதி பயணம் இல்ல.. முழு நேர வேலை சகோ! என்றும் ஆங்கிலத்தில், கருப்பு வண்ண நிறத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் பாலக்கரை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பொது இடத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன, மேலும் விஜய் நிகழ்ச்சி ரத்து செய்த நிலையில் நள்ளிரவுவெகு நேரம் காத்திருந்து விரக்தியில் மன வேதனையில் சென்ற , கட்சித் தொண்டர்களா, ரசிகர்களா, இல்லை வேறு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்பார்களா யார்? இந்த போஸ்டரை பெரம்பலூர் நகர் முழுவதும் ஒட்டிய மர்ம நபர்கள் என்பது குறித்து பொதுமக்களிடையே சர்ச்சை எழுந்து உள்ளது.