ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் க.சரவணன் கலந்து கொண்டார். மேலும் இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சட்டமன்றத் தேர்தல் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்வில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.