பூச்சிமருந்து குடித்து அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே பூச்சிமருந்து குடித்து அடையாளம் தெரியாத முதியவர் ரயில் தண்டவாளம் அருகே உயிரிழப்பு;
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த அரசபிள்ளைபட்டி அடையாளம் தெரியாத முதியவர் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடையாளம் தெரியாத முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.