புரட்டாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வரும் 24ஆம் தேதி துவங்குகிறது;

Update: 2025-09-14 15:26 GMT
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், புரட்டாசி பிரமோற்சவ விழா செப்.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்.2ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல், 10 மணிக்குள் தேரோட்டமும், அக்.4ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு மேல், 11.30 மணிக்குள்ளும், மாலையில் 6 மணிக்கும் தெப்ப உற்சவம் நடைபெறும். அக்.5ம் தேதி காலை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Similar News