சோழவந்தான் பேரூர் திமுக செயலாளருக்கு விருது

சோழவந்தான் திமுக பேரூர் செயலாளருக்கு விருது வழங்கப்படவுள்ளது.;

Update: 2025-09-14 15:32 GMT
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறது.கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News