நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
மூலனூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் மூலனூரில் நடந்தது. முகாமை, தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். முகாமிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில், மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் செயலாளர் கோ.சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி மன்றத் தலைவர் ரேவதி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்