எழுமலை காவல் ஆய்வாளர் மறைவு
மதுரை மாவட்டம் எழுமலையில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மலைச்சாமி நேற்றிரவு உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மலைச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செப்.14) இரவு உயிரிழந்தார் .இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.இவரது சொந்த ஊரான கம்பத்தில் இன்று (செப்.15) இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவரது மறைவு காவல் துறை வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.