ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது
ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது;
ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி மற்றும் அஜய் ஆகிய இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்தார்.