காவேரிப்பாக்கம் அருகே ஏ.சி. வெடித்து விபத்து!
காவேரிப்பாக்கம் அருகே ஏ.சி. வெடித்து விபத்து!;
காவேரிப்பாக்கம் அடுத்த கர்ணாவூர், வடக்கு தெருவை சேர்ந்த வர் ஆறுமுகம் (வயது 52) விவசாயி. இவரது வீட்டின் மேல்மா டியில் உள்ள வீட்டில் சில நாட்களாக ஏ.சி. பழுதாகி இருந்துள் ளது. அதை நேற்று மெக்கானிக் வந்து பழுதை சரிசெய்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் வெளியே நின்றுகொண்டிருந் தார். அப்போது திடீரென ஏ.சி. வெடித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கரும்புகை சூழ்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனே ஆறுமுகம் தனது குடும்பத்தி னருடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த தீ விபத் தில் வீட்டிலி இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில் மெத்தை, மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.