சாலை ஓரங்களில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் துர்நாற்றம்
சாலை ஓரங்களில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் துர்நாற்றம்;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள திப்பம்பட்டி காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் கோழிக் கழிவுகள் கொட்டி வருவதால் அந்தபகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக சுகாதாரத் துறையினர் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று என்று அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.