அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;
தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சிவராசு, பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணி ஓய்வு பெறும் நாளிலேயே பண பலன்கள் வழங்கப்பட வேண்டும், பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினார். சி.ஐ.டி.யு.வை சேர்ந்த பொன்னுச்சாமி மற்றும் சுப்பிரமணி, மாவட்ட இணைச்செ யலாளர் மேகலிங்கம் ஆகியோர் பேசினார்கள். வட்ட கிளை செயலாளர் தில்லையப்பன் நன்றி கூறினார்.