காவேரிப்பட்டிணம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது
காவேரிப்பட்டிணம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சாப்பர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). புங்கம்பட்டியை சேர்ந்தவர் அருள் (56). இவர்கள் இருவரும் விவசாயிகள். இவர்களது விவசாய நிலம் அடுத்தடுத்து உள்ளதால் இவர்களுக்கு இடையே வழித்தட பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் மீண்டும் தகராறு வந்துள்ளது. அப் போது, விஸ்வநாதனை அருள் இரும்பு கம்பியால் தாக்கி மிரட் டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரி பேரில் காவேரிப்பட்டணம் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.