தேன்கனிக்கோட்டை அருகே சாலை ஓரத்தில் காட்டு யானை.
தேன்கனிக்கோட்டை அருகே சாலை ஓரத்தில் காட்டுயானை.;
[கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம டைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களு டன் அப்படியே நின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர்.