குப்பேபாளையம் பகுதிகளில் இன்று மின்தடை !

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-16 02:27 GMT
கோவையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செப்டம்பர் 16, செவ்வாய்க்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. குப்பேபாளையம் துணை மின்நிலையம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், குப்பேபாளையம், ஒண்ணிப்பாளையம், சி.கே.பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாளிபுதூர், மூணுக்கட்டியூர், ரங்கப்ப கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும்.

Similar News