அன்பு கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்
அன்பு கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்;
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய் - தந்தையை இழந்த 42 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கான ஆணைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, இ.ஆ.ப., அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.