பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரின் செயலால் பரபரப்பு

பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரின் செயலால் பரபரப்பு;

Update: 2025-09-16 08:29 GMT
மதுராந்தகம் அருகே நிலம் தகராறு காரணமாக பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் ஆய்வாளர் தனியார் செய்தியாளரை தாக்கியது மட்டும் இல்லாமல் மேலும் இருவரை அடித்து இழுத்துக் கொண்டு போய் ஜிபில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பகுதியில் உதயகுமார் என்பவர் தங்களுடைய வீட்டின் அருகாமையில் உள்ள இடத்தை கொளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தங்களுக்கு சொந்தமான இடம் அதில் உள்ளது என இருவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இந்த இடத்தை அளவீடு செய்வதற்காக ஒரு தரப்பினர் கோர்ட் உத்தரவுடன் வந்தவர் தங்களுக்கு வருவாய்த்துறையினர் அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பவுஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்த பொழுது உதயகுமார் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தபோது உதயகுமார் மற்றும் அவரது உறவினரை அடித்து தரதரவென சட்டைப் பிடித்து இழுத்துச் சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றிய பொழுது தனியார் தொலைக்காட்சி நிருபர் இதை செய்தி சேகரிக்கும் பொழுது செய்தியாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மேலும் யார் வீடியோ எடுத்தாலும் அவர்களையும் தாக்குவேன் நான் ஆய்வாளர் மிரட்டினார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News