சூலூரில் தென்னை நார் தொழிற்சாலையில் தீவிபத்து: பெரும் சேதம் தவிர்ப்பு !

தீயணைப்புத்துறையின் துரித நடவடிக்கையால் தொழிற்சாலை பெரும் சேதத்திலிருந்து காக்கப்பட்டது.;

Update: 2025-09-16 09:13 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே பூராண்டாம்பாளையத்தில் உள்ள ஜீவபாரதி என்பவருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நார்கள் எரிந்து கொண்டிருந்த நிலையில், தொழிலாளர்கள் உடனடியாக தகவல் அளித்தனர். சூலூர் தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். அவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News